NASA - Netflix  pt
டெக்

நாசா உடன் கைக்கோர்த்த Netflix.. இனி விண்வெளி நிலையத்தை நேரலையில் பார்க்கலாம்!

நாசா உடன் கைக்கோர்த்திருக்கும் Netflix இனி விண்வெளி நிலைய செயல்பாடுகளை நேரலையில் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளது.

PT WEB

நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் சினிமாக்கள், சீரியல்களை மட்டுமல்ல... விண்வெளி நிலைய செயல்பாடுகளை கூட இனி நேரலையில் கண்டுகளிக்க முடியும். இதற்காக அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசாவுடன் நெட்ஃப்ளிக்ஸ் ஒப்பந்தம் செய்துள்ளது.

இதன் மூலம் நாசாவின் ராக்கெட் ஏவும் நிகழ்வுகள், விண்வெளி நிலைய செயல்பாடுகளை நேரலையில் காணலாம். நாசாவின் பிரத்யேக இணையதளத்தில் இச்சேவை ஏற்கனவே தரப்படும் நிலையில் பெருவாரியான மக்களை சென்றடைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது