டெக்

இந்தியாவில் நெட்ஃபிளிக்ஸ் வெற்றி பெறாதது விரக்தியளிக்கிறது - இணை நிறுவனர் ரீட் ஹேஸ்டிங்ஸ்

கலிலுல்லா

இந்தியாவில் நெட்ஃபிளிக்ஸ் வெற்றி பெறாதது விரக்தியளிக்கிறது என்று அதன் இணை நிறுவனர் ரீட் ஹேஸ்டிங்ஸ் தெரிவித்துள்ளார்.

2021-ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் ஆசியா பசிபிக் பிராந்தியத்தில், ஸ்ட்ரீமிங் பொழுதுபோக்கு நிறுவனமான நெட்ஃபிளிக்ஸில் 2.58 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் இணைந்துள்ளனர். இந்தியாவை பொறுத்தவரை நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்திற்கான சந்தா விலை குறைக்கப்பட்டது. பிராந்திய மொழிப்படங்கள் வெளியிடப்படுகின்றன. இருந்த போதிலும், இந்தியா ஒரு கடினமான சந்தையாக இருப்பதாக அதன் இணை நிறுவனர் ரீட் ஹேஸ்டிங்ஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், ''மற்ற இடங்களில் நல்ல முன்னேற்றத்தை கண்டு வருகிறோம். ஆனால், இந்தியாவில் வெற்றி பெற முடியாதது விரக்தியடையச் செய்துள்ளது. இருப்பினும், நிச்சயமாக நாம் அங்கு முன்னேற்றத்தை காணுவோம். மற்ற நாடுகளைக்காட்டிலும், இந்தியாவில் மாத சந்தாவின் விலையை குறைத்தோம். இது பயனாளர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த புதிய விலைகள் நெட்ஃபிளிக்ஸை பரந்த அளவிலான மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்றார்.