பார்க்கர் விண்கலம் நாசா
டெக்

பார்க்கர் சோலார் ப்ரோப் சூரியனை நெருங்கி ஆய்வு: நாசாவின் புதிய சாதனை

கிருஸ்துமஸ் நாளான இன்று நாசாவின் விண்கலமான பார்க்கர் சோலார் ப்ரோப் ஒரு சாதனையை படைத்து வருகிறது

Jayashree A

கிருஸ்துமஸ் நாளான இன்று நாசாவின் விண்கலமான பார்க்கர் சோலார் ப்ரோப் ஒரு சாதனையை படைத்துவருகிறது.

சூரியனின் மேற்பரப்பை ஆராயவும், கரோனா குறித்த தகவலை பெறவும் நாசாவானது 2018 ஆகஸ்ட் மாதம் பார்க்கர் சோலார் என்ற விண்கலத்தை விண்ணில் செலுத்தியது.

சூரியனை ஆய்வுசெய்வது என்பது இயலாத ஒன்று, இருப்பினும் நெருங்கிய தூரத்தில் சூரியனை ஆய்வு செய்ய பார்க்கர் சோலார் ப்ரோப் 1,700 டிகிரி ஃபாரன்ஹீட் (930 டிகிரி செல்சியஸ்) தாங்கக்கூடிய வெப்பக் கவசத்துடன் மற்ற விண்கலங்களை விட சூரியனுக்கு நெருக்கமாக பறந்து செல்கிறது. இது ஏற்கெனவே 21 முறை சூரியனைக் கடந்துவிட்டது. இருப்பினும் இன்னும் சூரியனுக்கு மிக நெருக்கமாக செல்கிறது.

இந்த விண்கலம், நமது நட்சத்திரத்தைப் பற்றிய அறிவியல் புரிதலை ஆழமாக்குவதற்கும், பூமியில் வாழ்வைப் பாதிக்கக்கூடிய விண்வெளி-வானிலை நிகழ்வுகளை முன்னறிவிப்பதற்கும் ஏழாண்டு பணியை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், விஞ்ஞானிகள் திட்டமிட்டப்படி,பார்க்கர் சோலார் ப்ரோப் சுமார் 430,000 mph (690,000 kph) வேகத்தில் இன்று சூரியனுக்கு அருகாமையில் சூரியனை சுற்றி திரும்புகிறது அதை உறுதிப்படுத்த விஞ்ஞானிகள் வெள்ளிக்கிழமை வரை காத்திருக்கவேண்டும். மேலும் சூரியனின் அருகாமையில் செல்லும் இந்த விண்கலத்திலிருந்து அடுத்தக்கட்ட தகவலைப்பெற விண்கலத்துடனான தொடர்பினை ஏற்படுத்தி வருகின்றனர்.

நமது பிரபஞ்சத்தைப் பற்றிய நீண்டகால கேள்விகளுக்கு பார்க்கர் சோலார் ப்ரோப் பதிலளிக்கும் என்றும், சூரியக் காற்று எவ்வாறு உருவாகிறது, கொரோனா ஏன் கீழே உள்ள மேற்பரப்பை விட வெப்பமாக உள்ளது, மற்றும் கரோனல் வெகுஜன வெளியேற்றங்கள் - விண்வெளியில் வீசும் பிளாஸ்மாவின் பாரிய மேகங்கள் எப்படி உருவாகின்றன என்ற பல தகவல்களுக்கு பார்க்கர் பதிலளிக்கும் என்று நாசா நம்பி வருகிறது.

"விண்கலத்திலிருந்து அந்த முதல் நிலை புதுப்பிப்பைப் பெற வரும் வாரங்களில் அறிவியல் தரவைப் பெறத் தொடங்குவோம்." என்று பார்க்கர் சோலார் ப்ரோப் திட்ட விஞ்ஞானி அரிக் போஸ்னர் திங்களன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இதே போன்று மார்ச் 22, 2025 மற்றும் ஜூன் 19, 2025 - இரண்டும் சூரியனிலிருந்து இதேபோன்ற நெருக்கமான தூரத்தில் பார்க்கர் தனது ஆய்வை மீண்டும் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.