நாசாவின் அதிநவீன ரோமன் விண்வெளி தொலைநோக்கி வெற்றிகரமாக விண்வெளிக்கு ஏவப்பட்டது.
நாசாவின் அதிநவீன 'ரோமன் விண்வெளி தொலைநோக்கி', ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணிற்கு சென்றது. ஃபுளோரிடாவின் கேப் கார்னிவலில் இருந்து ஏவப்பட்ட இது, ஹப்பிள் தொலைநோக்கியை விட 100 மடங்கு பரந்த பார்வை கொண்டதாகும். 4 புள்ளி 3 பில்லியன் டாலர் மதிப்பில் உருவாக்கப்பட்ட இந்த தொலைநோக்கி, பூமியிலிருந்து 16 லட்சம் கி.மீ தொலைவுக்குப் பயணிக்கிறது.
நாசாவின் முதல் பெண் தலைமை வானியலாளர் நான்சி ரோமனின் பெயரிடப்பட்ட இந்தத் தொலைநோக்கி, விண்வெளியின் புதிய கோள்கள், கோடிக்கணக்கான புதிய விண்மீன்களைக் கண்டறிந்து வானியலில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.