டெக்

விண்வெளியில் உள்ள கருந்துளைகளை ஆய்வு செய்யும் நாசா..!

விண்வெளியில் உள்ள கருந்துளைகளை ஆய்வு செய்யும் நாசா..!

webteam

விண்வெளியில் உள்ள கருந்துளைகள் பற்றி ஆய்வு செய்யும் பணியை தொடங்க நாசா திட்டமிட்டுள்ளது.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, 188 மில்லியன் டாலர் செலவில் விண்வெளியில் உள்ள கருந்துளைகள் பற்றிய ஆராய்ச்சியை தொடங்க திட்டமிட்டுள்ளது. இதற்கான முயற்சியில் சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள விண்வெளி வீரர்கள் தற்போது ஈடுபட்டுள்ளனர்.

விண்வெளியில் உள்ள கருந்துளைகள், நியூட்ரான் நட்சத்திரங்கள் போன்றவற்றில் காணப்படும் கண்களுக்குப் புலப்படாத விண்வெளி பொருட்கள் பற்றி துல்லிய புகைப்படங்களை, நேரடியாகப் பார்வையிட்டு அதனை பற்றிய ஆய்வு மேற்கொள்ள நாசா திட்டமிட்டுள்ளது. நாசாவின் இந்த முயற்சி 2020-ஆம் ஆண்டில் தொடங்கப்படும் எனவும் இதற்காக 3 மிகப்பெரிய விண்வெளி தொலைநோக்கிகளை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளதாகவும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.