இந்தியர்கள் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது 11 மாதங்களில் இல்லாத அளவு குறைந்துள்ளது.
கடந்த மார்ச் மாதத்தில் பங்குசார்ந்த மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் 25 ஆயிரத்து 82 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டிருந்ததாகவும் இது முந்தைய மாதத்தை விட 14% குறைவு என்றும் தெரியவந்துள்ளது. இந்திய மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்களின் சங்கம் இத்தகவலை தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் தொடங்கியுள்ள வர்த்தகப்போர், மத்திய கிழக்கு மற்றும் ரஷ்யா, உக்ரைன் இடையிலான போர் நிலவரங்களை ஒட்டி இந்திய பங்குச்சந்தைகளில் கடுமையான சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் முதலீட்டாளர்களிடம் பெரும் அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகளிலும் இது எதிரொலித்து வருகிறது