டெக்

அதிவேக சார்ஜ் வசதிகொண்ட மோடோ ‘ஜி7 ப்ளஸ்’ - சிறப்பம்சங்கள்..!

அதிவேக சார்ஜ் வசதிகொண்ட மோடோ ‘ஜி7 ப்ளஸ்’ - சிறப்பம்சங்கள்..!

webteam

மோடோ நிறுவனத்தின் புதிய மாடல் ஸ்மார்ட்போனான ‘ஜி7 ப்ளஸ்’ மாடலின் சிறப்பம்சங்கள் மற்றும் புகைப்படம் இணையத்தில் கசிந்துள்ளது.

மோடோ நிறுவனம் பல புதிய ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வருகிறது. அதுமட்டுமின்றி அனைத்து ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் நாள்தோறும் பல புதிய வசதிகளுடம் பல்வேறு ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வருகின்றன. ஆனால் இதில் குறிப்பிட்ட சில வசதிகள் மட்டுமே வாடிக்கையாளர்களிடம் வரவேற்பை பெறுகின்றன. குறிப்பாக தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் புகைப்படம் எடுப்பது, வீடியோ எடுப்பது போன்றவற்றை செல்போனில் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டுள்ளதால், கேமரா தரம் அதிக கொண்ட செல்போன்களை விரும்புகின்றனர்.

அதேபோன்று இது அவசர உலகமாக இருப்பதால், அனைத்தும் விரைவாக இருக்க வேண்டும் என்ற மனநிலையுடன் வாடிக்கையாளர்கள் உள்ளனர். ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்வதிலும் இந்த அவசரம் இருக்கிறது. குறைந்த நேரம் சார்ஜ் போடவேண்டும், அதிக நேரம் சார்ஜ் நிக்க வேண்டும் என்பது அனைத்து ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களின் மனநிலையாக உள்ளது. இதனை மையப்படுத்தி மோடோ தயாரித்துள்ள புதிய ஸ்மார்ட்போன் தான் ‘ஜி7 ப்ளஸ்’.

இந்த போனில் 6.2 இன்ச் ஹெச்.டி டிஸ்ப்ளே உள்ளது. 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இண்டெர்நல் ஸ்டோரேஜ் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் 3,000 எம்.ஏ.எச் திறன் பேட்டரி உள்ளது. அதை 27 வாட் பவரும் விரைவில் சார்ஜ் செய்ய முடியும். இதன் விலை இந்திய மதிப்பில் ரூ.29,300 இருக்கலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல்கள் பிப்ரவரி 7ஆம் தேதியன்று வெளியாகும் எனக் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து ‘ஜி7’, ‘ஜி7 ப்ளே’ மற்றும் ‘ஜி7 பவர்’ ஆகிய மாடல் போன்களும் வெளியாகும் எனக்கூறப்படுகிறது.