டெக்

நிமிடத்துக்கு 50 மொபைல்: அள்ளுது மோட்டோ ஜி5 பிளஸ் விற்பனை

நிமிடத்துக்கு 50 மொபைல்: அள்ளுது மோட்டோ ஜி5 பிளஸ் விற்பனை

Rasus

பிளிப்கார்ட்டில் நிமிடத்துக்கு 50 மொபைல்கள் வீதம் விற்பனையாகி, மோட்டோ ஜி5 பிளஸ் இதுவரை இல்லாத அளவுக்கு விற்பனையில் சாதனைப் படைத்துள்ளது.

லெனோவா நிறுவனத்தின் மோட்டோ ஜி5 பிளஸ் ஸ்மார்ட்போன், இந்தியாவில் மார்ச் 15-ல் வெளியானது. பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட்டு வரும் இந்த மொபைல் இதுவரை இல்லாத அளவுக்கு விற்பனையில் சாதனை படைத்துள்ளது. நிமிடத்துக்கு 50 மொபைல் போன்கள் விற்றுத் தீர்வதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

முதல் நாள் விற்பனையை முன்னிட்டு சிறப்பு சலுகையை இந்நிறுவனம் அறிவித்திருந்தது. எக்சேஞ்ச் செய்யும் போது ரூ.1500 தள்ளுபடி, ஸ்டேட் பேங்க் கார்டுகளை பயன்படுத்துவோருக்கு 10 சதவிகிதம் தள்ளுபடி. மாதம் ரூ.1,889 செலுத்தி தவணை முறையிலும் மோட்டோ ஜி5 ஸ்மார்ட்போனை வாங்க முடியும் என தெரிவித்திருந்தது. இந்நிலையில் நிறுவனம் எதிர்பார்த்தப்படி அதன் விற்பனை அமோகமாக உள்ளது.

மோட்டோ ஜி5 பிளஸ், இருவிதமான விலைகளில் விற்பனையாகிறது. ரூபாய் 14,999-க்கு விற்பனையாகும் மொபைல் 3ஜிபி ரேம் வசதியுடன் 16 ஜிபி இன்டர்னல் மெமரி வசதி உள்ளது. ரூ.16,999-க்கு விற்பனையாகும் மொபைல் 4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டர்னல் மெமரி வசதியுடன் வந்துள்ளது.