டெக்

UPI மூலம் கடந்த டிசம்பரில் ரூ.8.26 லட்சம் கோடி பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது

EllusamyKarthik

கடந்த 2021 டிசம்பர் மாதத்தில் மட்டுமே சுமார் 8.26 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாக நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவின் அண்மைய தரவுகள் தெரிவிக்கின்றன. இது முன்னெப்போதும் இல்லாத அளவிலான பரிவர்த்தனை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 456 கோடி பேமெண்ட் பரிமாற்றங்கள் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 2021-இல் மட்டும் மொத்தம் 3,874 பேமெண்ட் பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2020-இல் இந்த எண்ணிக்கை 1887 கோடி என இருந்துள்ளது. 2021-இல் 71.46 லட்சம் கோடி மற்றும் 31 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. 

வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா சூழலில் டிஜிட்டல் பேமெண்ட்களில் யூபிஐ மிகவும் முக்கிய பங்காற்றி வருகிறது. இந்தியாவில் நிதி சார்ந்த பரிவர்த்தனைகள் டிஜிட்டல் மயமாகி வருவதன் எடுத்துக்காட்டு இது எனவும் வல்லுனர்கள் சொல்கின்றனர்.

SOURCE : Money Control