டெக்

மங்கோலியாவின் முதல் செயற்கைக்கோள்: இன்று பாய்கிறது

webteam

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி சர்வதேச விண்வெளி ஏவுதளத்தில் இருந்து, மங்கோலியா நாட்டின் முதல் செயற்கைக்கோள் இன்று விண்ணில் ஏவப்படவுள்ளது.

உலக நாடுகளின் உதவியுடன், புதிய செயற்கைக்கோள் வடிவமைத்து அதனை விண்வெளிக்கு அனுப்ப மங்கோலியா திட்டமிட்டுள்ளது. யுனெஸ்கோ, ஜப்பான் உதவியுடன், மங்கோலியாவுக்காக, ஸ்பெக்ஸ் எக்ஸ் ந்பெல்கான் 9 என்ற செயற்கைக்கோள் தயாரிக்கப்பட்டுள்ளது. மங்கோலியா செயற்கைக்கோள் பூமியில் இருந்து 400 கிமீ தூரத்தில் பயணிக்கிறது. மங்கோலிய நாட்டு விஞ்ஞானிகள் அந்த செயற்கைக்கோளை ஒரு நாளைக்கு 5 அல்லது 6 முறை தொடர்பு கொண்டு தகவல்களை பெற முடியும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். 

பூமியின் மேற்பரப்பில் வரைபடங்கள் மற்றும் இயற்கை பேரழிவுகளின் அறிகுறிகள் பற்றிய தகவல்களைத் துல்லியமாக இந்த செயற்கைக்கோள் கணிக்கும் எனக் கூறப்படுகிறது. வரும் 2019 ஆம் ஆண்டில் இரண்டாவது செயற்கைக்கோளை மங்கோலியா அறிமுகப்படுத்தும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.