டெக்

சுவாசம் மூலம் கொரோனாவை கண்டறியும் நவீன மாஸ்க்

Sinekadhara

சுவாசம் மூலமாக கொரோனாவை கண்டறியும் நவீன முகக்கவசத்தை, ஹார்வர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த வகை முகக்கவசத்தை 15 முதல் 30 நிமிடங்களுக்கு மேலாக அணிய வேண்டும். அதன் பின்னர் முகக்கவசத்தில் உள்ள பட்டனை அழுத்தினால், 90 நிமிடங்களில் சுவாசத்தின் மூலமாக கொரோனாவை கண்டறிவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். முகக்கவசத்தில் புகுத்தப்பட்டுள்ள சென்சார் மூலமாக எளிதில் கொரோனாவை கண்டறிவதாகக் கூறுகின்றனர். இந்த வகை முகக்கவசம், குறைந்த செலவில் கொரோனாவை வேகமாகக் கண்டறியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.