டெக்

மொபைல் இணையத்திற்கு அடிமையாகும் இந்தியர்கள்

மொபைல் இணையத்திற்கு அடிமையாகும் இந்தியர்கள்

webteam

இந்தியாவில் மொபைல் இண்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 9 மடங்கு அதிகரித்துள்ளது. 

இந்தியாவில் கடந்த சில நாட்களாக ரிலையன்ஸ் ஜியோ 4ஜி நெட்வொர்கின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதையடுத்து, ஏர்டெல், வோடபோன் உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களும் பல்வேறு சலுகைகளை அறிவித்தது. இதனால் மொபைல் இணையதளத்தை பயன்படுத்துபவரின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. அதன்படி, கடந்த ஆண்டு மொபைல் இண்டெர்நெட்டை 15 கோடி ஜிகா பைட் வரை பயன்படுத்திய இந்தியர்கள், இந்த ஆண்டு மார்ச் வரை மட்டும் 130 கோடி ஜிகா பைட் டேட்டாவை பயன்படுத்தியுள்ளதாக இண்டர்நெட் டிரென்ட்ஸ் 2017 தெரிவித்துள்ளது.  
இதன் மூலம் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு மொபைல் இண்டர்நெட் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 9 மடங்கு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.