டெக்

மனநிலையைப் பாதிக்கும் ஸ்மார்ட்போன் பயன்பாடு

மனநிலையைப் பாதிக்கும் ஸ்மார்ட்போன் பயன்பாடு

webteam

அதிகப்படியான ஸ்மார்ட்போன் பயன்பாடு இளைஞர்களின் தூக்கம், மனநிலை ஆகியவற்றில்  கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. 

கையடக்க உலகமான ஸ்மார்ட்போனில் இளைஞர்கள் செலவிடும் நேரம் தொடர்ந்து அதிகரித்துக்  கொண்டே செல்வது குறித்து ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக  வாஷிங்டனில் உள்ள குழந்தைகள் மனவளர்ச்சி மையத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ஆய்வு நடத்தினர்.  குழந்தைகள் மற்றும் பெரியவர்களிடையே ஸ்மார்ட்போன் பயன்பாடு என்ற தலைப்பில் அவர்கள்  ஆய்வு நடத்தினர். ஸ்மார்ட்போன் பயன்பாடு மூளையின் செயல்பாடுகளைக் கடுமையாகப் பாதிப்பதாக  இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. இன்றைய சூழலில் பெரும்பாலான குழந்தைகளின் விளையாட்டு  பொருளாக ஸ்மார்ட்போன்கள் மாறிவிட்டன. குழந்தைப் பருவத்தில் ஸ்மார்ட்போன் பயன்பாடு,  அவர்களின் தொடக்ககால மூளை வளர்ச்சியை தேக்கமடையச் செய்து விடும் என்றும்  எச்சரிக்கிறார்கள் ஆய்வாளர்கள். அதேபோல, தூக்கம், மனநிலை, மன ஆரோக்கியம் ஆகியவற்றிலும்  ஸ்மார்ட்போன் பயன்பாடு குறிப்பிடத்தக்க அளவு பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் கூறப்பட்டுள்ளது.  ஸ்மார்ட்போன் பயன்பாடு குழந்தைகள் மற்றும் பெரியவர்களை அடிமைப்படுத்தி, சமூகத்திலிருந்து  அவர்களை தனிமைப்படுத்தும் முக்கியமான காரணியாக அமைந்துள்ளதாகவும் ஆய்வாளர்கள்  தெரிவித்துள்ளனர்.