10 முதல் 20 சதவீதம் வரை கட்டணங்கள் உயரலாம் எனவும், வரும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்திற்கு முன்பாக, இந்த கட்டண உயர்வு அமலுக்கு வரலாம் எனவும் கூறப்படுகிறது.
மூலதன தேவைக்காகவும், வருவாயை அதிகரிக்கும் நோக்கிலும், கட்டணத்தை உயர்த்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அண்மையில் ஜியோ, ஏர்டெல், வோடபோன் உள்ளிட்ட நிறுவனங்கள், செல்போன் கட்டணங்களை உயர்த்தியிருந்தன. இதனால் வாடிக்கையாளர்கள், பி.எஸ்.என்.எல் சேவைக்கு மாறியதும் குறிப்பிடத்தக்கது.