டெக்

ஸ்மார்ட்போன்களின் இணைய வேகம்: மக்களவையில் அமைச்சர் விளக்கம்

ஸ்மார்ட்போன்களின் இணைய வேகம்: மக்களவையில் அமைச்சர் விளக்கம்

webteam

இரண்டு சிம்கார்டுகள் கொண்ட ஸ்மார்ட்போன்களில் கால் டிராப் மற்றும் இணைய வேகம் குறைவது தொடர்பான பிரச்னைகள் அதிகம் ஏற்படுவதாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் சட்டத்துறை இணையமைச்சர் பி.பி.சவுத்ரி தெரிவித்தார். 

இதுதொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் அளித்த எழுத்துப்பூர்வமான பதிலில், இரண்டு சிம்கார்டுகள் கொண்ட 4ஜி ஸ்மார்ட்போன்களில் ஏற்படும் இதுபோன்ற பிரச்னைகளை சரிசெய்யுமாறு ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். தகவல் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் (டிராய்) அறிக்கையின் படி, இரண்டு சிம்கார்டுகள் வசதி கொண்ட ஸ்மார்ட்போன்களில் இணைய வேகம் குறைவதாகவும் கூறப்பட்டுள்ளது என்றும் அமைச்சர், தனது பதிலில் சுட்டிக்காட்டியுள்ளார். அந்த இரண்டு சிம்கார்டு ஸ்லாட்களில் ஒன்றை மட்டுமே பயனாளர்கள் பயன்படுத்தினாலும், அவற்றில் ஒன்று மட்டுமே 4ஜி வசதி கொண்டதாக இருக்கும் என்றும், அதை ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள் ஏற்கனவே முடிவு செய்திருப்பார்கள் அல்லது பயனாளர்கள் தேர்ந்தெடுக்கலாம் என்றும் அமைச்சர் சவுத்ரி கூறியுள்ளார்.