கடந்த 2021 அக்டோபர் வாக்கில் மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் 11 இயங்குதளத்தை அறிமுகம் செய்திருந்தது. சுமார் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு இந்த இயங்குதளத்தை அந்நிறுவனம் அறிமுகம் செய்திருந்தது. இந்த நிலையில் டேப்லெட் சாதனங்களுக்கு ஏற்ற வகையில் விண்டோஸ் 11-இல் புதிய டாஸ்க் பார் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப செய்திகளை வெளியிட்டு வரும் The Verge செய்தி நிறுவனம், மைக்ரோசாப்ட் அதனை சோதனை செய்ய தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. இருந்தாலும் அது பார்க்க மிகவும் சிறியதாக இருப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது. அதில் தேதி, நேரம் மற்றும் பேட்டரி திறன் குறித்த தகவல் மட்டுமே இருப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது.
மேலும் கூடுதல் ஸ்க்ரீன் ஸ்பேஸிற்காக டாஸ்க் பார் தானாக மறையும் (Hidden) வகையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Widgets-லும் மைக்ரோசாப்ட் நிறுவனம் மாற்றம் கொண்டு வரவுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனை விண்டோஸ் இன்சைடர் டீம் உறுதி செய்துள்ளது.
மேலும் 37 புதிய எமோஜிக்களை விண்டோஸ் 11 கொண்டு வார உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு வரும் நாட்களில் மேலும் சில புதிய அம்சங்கள் விண்டோஸ் 11-இல் அறிமுகம் செய்ய உள்ளதாகவும் சொல்லப்பட்டுள்ளது.