டெக்

பார்வையற்றவர்களுக்கு உதவும் மைக்ரோசாப்டின் புதிய செயலி

webteam

செயற்கை அறிவின் உதவியோடு சுற்றுப் புறங்களில் நிகழ்பவற்றை பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு எடுத்துச் சொல்லும் வகையில் புதிய செல்போன் செயலியை மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
 
சீயிங் ஏஐ (Seeing AI) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த செயலியை முதற்கட்டமாக ஆப்பிள் செல்போன் பயனாளர்கள் இலவசமாக தரவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. செல்போன் கேமிராவைப் பயன்படுத்தி சுற்றுப்புறத்தில் உள்ளவற்றை குரல் வழியாக பார்வையற்றவர்களுக்கு விளக்கும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. 

உதாரணமாக இந்த செயலியைப் பயன்படுத்தி செல்போன் கேமிராவில் ஒரு பூங்காவைக் காட்டினால், அந்த பூங்காவில் உள்ள பூக்கள், அவற்றின் தன்மை மற்றும் சூழல் ஆகியவற்றை விளக்கும். அதேபோல், உணவகத்தின் பில் எவ்வளவு என்று கேமிராவில் காட்டினால் போதும். அது பார்வையற்றவர்களுக்குச் சொல்லி விடும்.