இந்தியாவில் சர்வேஸ் லேப்டாப் 4 மாடலை அறிமுகம் செய்துள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம். இந்த லேப்டாப்பின் டிசைன் கிட்டத்தட்ட பார்பதற்கு இதற்கு முன்பு வெளியான முந்தைய மாடலை போல உள்ளது. Alcantara அல்லது மெட்டல் பினிஷிங்கில் வெளிவந்துள்ள இந்த மாடல் இரு வண்ணங்களில் சந்தையில் கிடைக்கிறது. 13.5 மற்றும் 15 இன்ச் என இரண்டு மாடல்களிலும் தொடு திரை வசதிக்கான அம்சமும் இடம் பெற்றுள்ளது.
11வது ஜெனெரஷன் இன்டல் கோர் புரோஸசர் அல்லது AMD Ryzen 4000 சீரிஸ் புரோஸசர், Radeon கிராபிக்ஸ் ஆகியவை இதில் உள்ளன. செயல்திறன் மற்றும் பேட்டரி திறனில் சர்வேஸ் லேப்டாப் 3 மாடலை காட்டிலும் இந்த மாடல் வாடிக்கையாளர்களுக்கு திருப்தி அளிக்கும் எனவும் மைக்ரோசாப்ட் உறுதி அளித்துள்ளது.
பில்ட்-இன் HD கேமிரா, டால்பி ஆட்டமிஸ் ஆம்னிசோனிக் ஸ்பீக்கர், மைக்ரோபோன் ஆகியவையும் இதில் இடம்பெற்றுள்ளது. லேப்டாப்பின் அளவு, புரோஸசர் மற்றும் மெமரி மாதிரியானவற்றை பொறுத்து விலையில் மாற்றம் உள்ளது. இதன் ஆரம்ப விலை 102999 ரூபாயாகும்.