டெக்

தினமும் 1ஜிபி, 1 வருடம் ஃபிரீ கால்: மைக்ரோமேக்ஸின் மயக்கும் ஆஃபர்!

தினமும் 1ஜிபி, 1 வருடம் ஃபிரீ கால்: மைக்ரோமேக்ஸின் மயக்கும் ஆஃபர்!

webteam

வியாழக்கிழமையன்று அறிமுகப்படுத்தப்பட்ட மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் 2, ஸ்மார்ட்போன், ஏர்டெல் சிம் கார்டுடன் தினமும் 1 GB டேட்டா மற்றும் வருடம் முழுவதும் இலவச கால்கள் என்னும் கலாட்டா ஃபேக்கேஜாக

வெளிவந்துள்ளது.

11,999 விலையுடன் இந்திய வாடிக்கையாளர்களுக்கான சிறப்பு ஆஃபருடன் வெளிவந்துள்ள இந்த மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் 2 (Micromax canvas 2), இரண்டு நிபந்தனைகளையும் கொண்டுள்ளது.

1. ப்ரீ-பெய்டு வாடிக்கையாளர்கள் மட்டும் பெறக்கூடிய சலுகை இது.

2. சிம் கார்டைப் பொருத்தும் இடத்தில், முதல் ஸ்லாட்டில், இந்த ஏர்டெல் சிம்கார்டை பொருத்தவேண்டும்.