டெக்

‘எம்.ஐ ஏ3’ ஆகஸ்ட் 31 முதல் விற்பனை - சிறப்பம்சங்கள், விலை..!

webteam

எம்.ஐ நிறுவனத்தின் ‘ஏ3’ மாடல் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வரும் 31ஆம் தேதி முதல் திறந்தவெளி விற்பனைக்கு வருகிறது.

இந்த மாதத்தின் தொடக்கத்தில் எம்.ஐ நிறுவனம் தங்கள் புதிய ஸ்மார்ட்போனான ‘ஏ3’ மாடலை வெளியிட்டது. ஆனாலும் அது இந்தியாவில் வாடிக்கையாளர்கள் நேரடியாக வாங்கும் வகையில் திறந்த வெளி விற்பனைக்கு வரவில்லை. இந்நிலையில் வரும் 31ஆம் தேதி முதல் ‘ஏ3’ மாடல் ஸ்மார்ட்போனை வாடிக்கையாளர்கள் திறந்தவெளியில் வாங்கலாம் என எம்.ஐ நிறுவனம் அறிவித்துள்ளது. இதனை அமேசான், ஃபிளிப்கார்ட் மற்றும் எம்.ஐ.காம் ஆகிய இணைய வர்த்தக தளங்களில் வாங்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

எம்.ஐ ‘ஏ3’ ஸ்மார்ட்போன் கொரில்லா கிளாஸுடன் கூடிய 6.08 இன்ச் ஹெச்.டி டிஸ்ப்ளே கொண்டது. இதில் டிஸ்ப்ளே ஃபிங்கர்பிரிண்ட் ஆப்ஷன் இருக்கிறது. மெமரியை பொறுத்தவரை இரண்டு ரகம் உள்ளது. அதன்படி, 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இண்டெர்நல் ஸ்டோரேஜ் கொண்ட ரகத்தின் விலை ரூ.12,999 ஆகும். 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இண்டெர்நல் மெமரி கொண்ட ரகம் ரூ.15,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த போனின் பின்புறத்தில் 48 எம்பி (மெகா பிக்ஸல்), 8 எம்.பி வொயிடு ஆங்கிள் லென்ஸ், மற்றும் 2 எம்பி சென்ஸார் என மொத்தம் 3 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், 32 ஜிபி செல்ஃபி கேமராவும் உள்ளது. இவற்றுடன் வேகமாக சார்ஜ் செய்யக்கூடிய வகையில் 18 வாட்ஸ் வேகத்தில் 4,030 எம்.ஏ.எச் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.