டெக்

பிப்ரவரி 20ஆம் தேதி வெளியாகும் ‘எம்.ஐ 9’

webteam

சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனான எம்.ஐ 9 இந்த மாதம் 20ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய சந்தைகளில் ஸ்மார்ட்போன் விற்பனைகளுக்கிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. முதல் இடத்தை பிடிக்கும் முனைப்பில் அனைத்து நிறுவனங்களும், புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வருகின்றன. இதில் பட்ஜெட் விலையில் வெளியாகும் ஸ்மார்ட்போன்கள் தான் வாடிக்கையாளர்களை அதிகம் கவருகின்றன. இதை அறிந்துகொண்ட மொபைல் நிறுவனங்கள், குறைந்த விலை ஸ்மார்ட்போன்களை அதிகம் வெளியிடுகின்றன. அந்த வகையில் சியோமி நிறுவனமும் விலை மலிந்த ஸ்மார்ட்போன்கள் உட்பட பலவற்றை வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில் தனது புதிய மாடல் ஸ்மார்ட்போனான எம்.ஐ 9-ஐ வரும் 20ஆம் தேதி வெளியிடுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த போனின் சிறப்பம்சங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், அதுதொடர்பாக சில தகவல்கள் மட்டும் வெளியாகியுள்ளன. அதன்படி, இந்த ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம், 128 ஜிபி இண்டெர்நல் ஸ்டோரேஜ் மற்றும் 8 ஜிபி ரேம், 256 ஜிபி இண்டெர்நல் ஸ்டோரேஜ் ஆகிய இரண்டு ரகங்களில் வெளியாகும் எனப்படுகிறது.

இதன் கேமராவை பொறுத்தவரையில் பின்புறத்தில் 48 எம்பி மற்றும் 12 எம்பி என இரட்டைக் கேமராக்களுடன் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. முன்புறத்தில் 24 எம்.பி செல்ஃபி கேமரா வழங்கப்படலாம். அத்துடன் இதன் டிஸ்ப்ளே 6.40 இன்ச் எனவும், ஆண்ட்ராய்டு 9.0 இயங்குதளத்தில் இது செயல்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. 3500 எம்.ஏ.எச் திறன் கொண்ட பேட்டரி இதில் வழங்கப்பட்டுள்ளது.