ஆப்பிள் - மெட்டா web
டெக்

ஆப்பிள் நிறுவனத்திற்கு ரூ.4,871 கோடி அபராதம்.. மெட்டா-க்கு ரூ.1,949 கோடி அபராதம்! காரணம் இதுதான்!

டிஜிட்டல் சந்தை விதியை மீறியதாக ஆப்பிள் மற்றும் மெட்டா நிறுவனங்களுக்கு 700 மில்லியன் யூரோக்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Rishan Vengai

டிஜிட்டல் சந்தைகள் சட்டத்தை மீறியதாகக் கூறி, ஆப்பிள், மெட்டா நிறுவனங்களுக்கு, ஐரோப்பிய யூனியன் அபராதம் விதித்துள்ளது.

அபராதத்தை எதிர்க்கும் ஆப்பிள்..

அதன்படி, ஆப்பிள் நிறுவனத்திற்கு 4ஆயிரத்து 871
கோடி ரூபாயும் (500 மில்லியன் யூரோஸ்), மெட்டா நிறுவனத்திற்கு
1ஆயிரத்து 949 கோடி ரூபாயும் (200 மில்லியன் யூரோஸ்) அபராதம் விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெட்டா

இந்த நடவடிக்கைக்கு எதிராக, மேல்முறையீடு செய்ய ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த அபராத நடவடிக்கை, பயனர்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பிற்கு எதிரானது என்றும், தனது தொழில்நுட்பத்தை இலவசமாக வழங்க நிர்பந்திக்கும் செயல் என்றும் ஆப்பிள் நிறுவனம் குற்றஞ்சாட்டி
உள்ளது.