டெக்

ஜியோ, கூகுளுடன் மீடியாடெக் தயாரிக்கும் ஆண்ட்ராய்ட் கோ ஸ்மார்ட்போன்!

ஜியோ, கூகுளுடன் மீடியாடெக் தயாரிக்கும் ஆண்ட்ராய்ட் கோ ஸ்மார்ட்போன்!

webteam

1 ஜிபி ரேம்மிற்குள் ஆண்ட்ராய்ட் கோ அடங்கும் வகையில் புதிய ஸ்மாட்ர்ட்போன் தயாரிக்கப்படுகிறது.

தைவான் நாட்டை சேர்ந்த சிஸ்டம் சிப் தயாரிக்கும் கம்பெனி மீடியாடெக். பிரபலமான இந்த கம்பெனி செல்போன் மற்றும் நவீன பயன்பாட்டளர்களுக்கு உதவும் வகையில், மிகக்குறைந்த ஸ்டோரேஜ் உடன் இயங்கும் பல ஸ்மார்ட்போன் சிப்களை தயாரித்து வெளியிட்டுள்ளது. ஆண்ட்ராய்ட் வெர்ஷன்களின் லேடெஸ்ட்டாக வெளிவந்தது ஓரியோ. இதிலும் ஆண்டராய்ட் ஓரியோ கோ என்ற அப்டேட் வெர்ஷன் வந்துள்ளது. இந்நிலையில் குறைந்த அளவு ஸ்டோரேஜ் கொண்ட ஆண்ட்ராய்ட் கோ சாப்ஃட்வேரை ஜியோ மற்றும் கூகுளுடன் இணைந்து தயாரிக்கவுள்ளது.

தொலைத்தொடர்பு நிறுவனத்தில் புதிய உச்சத்தை எட்டியுள்ள ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், கடந்த ஆண்டு வெளியிட்ட ஜியோ போன் ஒரே மாதத்தில் சுமார் 6 மில்லியன்கள் விற்பனையாகின. இதனால் ஸ்மார்ட்போன் தயாரிக்கும் முயற்சியிலும் தற்போது ஜியோ களமிறங்கியுள்ளது. டேடா பேக்கேஜ்கள், ஜியோ விலை (3 வருடங்களில் ரூ.1500 பணம் வாபஸ்) என அனைத்திலும் ஜியோ எளிய மக்கள் வரை சென்றதில் குறியாக இருந்து வருகிறது. இதேபோல் தற்போது தயாரிக்க விரும்பும் ஸ்மார்ட்போனும் எளிய மக்கள் வரை செல்ல வேண்டும் என்பதில் அந்நிறுவனம் மிகக் கவனத்துடன் உள்ளது. இதற்காக மீடியா டெக்கிடம் ஜியோ ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அத்துடன் கூகுள் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன், இந்த போனை ஜியோ தயாரிக்கிறது. இதற்காக தயாரிக்கப்படும் ஆண்ட்ராய்ட் கோ சாப்ஃட்வேர் 512 எம்பி அல்லது 1 ஜிபி ரேம் ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன்களிலேயே இயங்கும் தன்மையை பெற்றிருக்கும்.