காபிக் கொட்டையின் மேல்தோலைக் கொண்டு கார் பாகங்களை தயாரிக்கும் திட்டத்திற்காக துரித உணவுகள் தயாரிப்பு நிறுவனமான மெக்டொனால்ட், கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டுடன் கைக்கோர்த்துள்ளது.
காபிக்கொட்டையை வறுக்கும்போது அதிலிருந்து பிரிந்து வரும் தோல் கழிவுகளை கொண்டு காரின் உதிரி பாகங்கள், முகப்பு விளக்கு உள்ளிட்ட பாகங்கள் தயாரிக்க முடியும் என ஃபோர்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. காபிக் கொட்டையின் தோல் அதிக வெப்பத்தை தாங்கும் ஆற்றல் கொண்டது. ஆகவே அதைக்கொண்டு உருவாக்கப்படும் பல்புகள் சூடாகும்போது சிதைவுறாது என ஃபோர்டு குழும தொழில்நுட்பத் தலைவர் டெபி கூறுகிறார்.
இதற்காகவே இந்த யுத்தியை கையிலெடுத்துள்ளதாக கூறும் அவர், கடந்த 2011 ஆம் ஆண்டும் கோதுமை, தேங்காய், தக்காளி போன்றவற்றின் கழிவுகளிலிருந்து மெத்தை உருவாக்கியதை சுட்டிக்காட்டியுள்ளார்.