44 பேர் கொண்ட AI கனவுக் குழு web
டெக்

44 பேர் கொண்ட AI கனவுக் குழுவை உருவாக்கிய ஜூக்கர்பெர்க்.. 2 இந்தியர்களுக்கு இடம்! திட்டம் என்ன?

44 பேர் கொண்ட ஏஐ சூப்பர் டீம்-ஐ அறிவித்துள்ளார் மார்க் ஜக்கர்பர்க். இந்த மெட்டா சூப்பர் டீமில் 50% பேர் சீனர்கள் இடம்பெற்றுள்ள நிலையில், இந்தியர்கள் 2 பேர் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.

PT WEB

மார்க் ஜூக்கர்பெர்க்கின் மெட்டா நிறுவனம் AI தொழில்நுட்பத்தில் மிகத்திறமையான 44 பேர் கொண்ட குழுவை உருவாக்கியுள்ளது. மார்க் ஜூக்கர்பெர்க்கே நேரடி தேடல் மூலம் இக்குழுவை உருவாக்கியுள்ளார்.

ஏஐ கனவு குழுவின் திட்டம் என்ன?

ஓபன் ஏஐ, ஆப்பிள் போன்ற நிறுவனங்களில் உயர் பொறுப்பில் இருந்த திறமைசாலிகளை மிக அதிக ஊதியம் கொடுத்து இக்குழுவில் மார்க் ஜூக்கர்பெர்க் சேர்த்துள்ளார். இவர்களின் ஆண்டு ஊதியம் 80 கோடி ரூபாய் முதல் 800 கோடி ரூபாய் வரை இருக்கும் எனக்கூறப்படுகிறது.

மார்க் ஜூக்கர்பெர்க்

இந்த பட்டியலில் 50% பேர் சீனர்கள் ஆவர். 75% பேர் வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடியேறிவர்கள் ஆவர். 75% பேர் ஓபன் ஏஐ, டீப்மைன்டு, ஸ்கேல் ஆகிய நிறுவனங்களில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளனர். திரபித் பன்சல் (TRABIT BANSAL) ஹம்மத் சையத் (HAMMAD SYED) ஆகிய இருவர் மட்டும் இந்தியர்கள் என தெரியவந்துள்ளது.

trapit bansal and hammad syed

ஏஐ துறையில் மிகப்பெரிய முன்னெடுப்புகளை மேற்கொண்டு உலகின் முன்னணி நிறுவனமாக மாற மெட்டா திட்டமிட்டுள்ளது. அதற்காகவே இந்த திறமைசாலிகள் குழுவை மார்க் ஜூக்கர்பெர்க் உருவாக்கியுள்ளார்.