rupay debit card web
டெக்

'RuPay Select Debit Card' உங்ககிட்ட இருக்கா? ஜிம் முதல் ஏர்போர்ட் வரை.. இவ்வளவு சலுகைகளா?

ரூபே டெபிட் செலக்ட் கார்டு வைத்திருப்போருக்கு பல்வேறு சலுகைகளை The National Payments Corporation of India (NPCI) அறிவித்து இருக்கிறது.

திவ்யா தங்கராஜ்

ரூபே டெபிட் செலக்ட் கார்டின் நன்மைகள் மற்றும் அம்சங்களுக்கான update- களை அறிவித்துள்ளது. இது ஏப்ரல் 1, 2025 முதல் அமலுக்கு வரும்.

ரூபே டெபிட் செலக்ட் கார்டு என்பது  உடற்பயிற்சி, பயணம் மற்றும் பொழுதுபோக்கு உள்ளிட்ட நவீன வாழ்க்கை முறை தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது.

என்னென்ன சலுகைகள்?

ரூபே டெபிட் செலக்ட் கார்டு வைத்திருப்பவர்கள் ஒவ்வொரு காலாண்டிற்கும் ஒரு இலவச உள்நாட்டு விமான நிலைய ஓய்வறைகளையும், வருடத்திற்கு இரண்டு சர்வதேச ஓய்வறைகளையும் பயன்படுத்திக்கொள்ளலாம். (நிபந்தனைகள் பொருந்தும்).

அடுத்ததாக விபத்து மரணம் அல்லது நிரந்தர ஊனத்திற்கு இந்த அட்டை ரூ.10 லட்சம் வரை தனிப்பட்ட விபத்து காப்பீட்டுத் தொகையை வழங்குகிறது. இருப்பினும், தகுதி பெற, கார்டுதாரர்கள் விபத்துக்கு முன் 30 நாட்களுக்குள் குறைந்தபட்சம் ஒரு RuPay பரிவர்த்தனையை மேற்கொண்டிருக்க வேண்டும்.

மூன்றாவதாக, ஒரு காலாண்டிற்கு ஒரு இலவச ஜிம் உறுப்பினர் தகுதியை பெற முடியும். அந்த வகையில் 90 நாட்கள் வீட்டு உடற்பயிற்சிகள் அல்லது 30 நாட்கள் ஆஃப்லைன் உடற்பயிற்சிகளுக்கான சலுகைகள் கிடைக்கும்.

அட்டைதாரர்கள் ஒரு காலாண்டிற்கு ஒரு இலவச மருத்துவ பரிசோதனை தொகுப்பைப் பெறலாம்.

அடுத்ததாக கோல்ஃப் பிரியர்கள் ஒரு இலவச கோல்ஃப் பயிற்சி அல்லது ஒவ்வொரு காலாண்டிற்கும் ஒரு சுற்று விளையாடும் வாய்ப்பை பெறலாம்.

ஒரு இலவச ஸ்பா அமர்வு அல்லது சலூன் சேவையை ஒரு காலாண்டில் பெறலாம்.  மற்றும் ரூ.100 மதிப்புள்ள cab service கூப்பன் ஆகியவற்றை ஒவ்வொரு காலாண்டிலும் பெறலாம்.

மேலும், ரூபே டெபிட் செலக்ட் கார்டு வைத்திருப்பவர்கள் ஓடிடி தளங்களான அமேசான் பிரைம், ஹாட்ஸ்டார் அல்லது சோனி லிவ் ஆகியவற்றிற்கான 12 மாத இலவச சந்தாவிலிருந்து பயனடைவார்கள்.

ரூபே செலக்ட் டெபிட் கார்டுக்கான வருடாந்திர கட்டணம் ரூ.250 என்பது குறிப்பிடத்தக்கது.  இது active ஆக உள்ள கார்டுகளை கணக்கெடுத்து ஒவ்வொரு காலாண்டிற்கும் வங்கிகளால் வசூலிக்கப்படும்.