டெக்

புளூட்டோவுக்கு அந்தஸ்து கேட்கும் விஞ்ஞானிகள்

புளூட்டோவுக்கு அந்தஸ்து கேட்கும் விஞ்ஞானிகள்

webteam

புளூட்டோவுக்கு கோள் என்ற அந்தஸ்தை மீண்டும் வழங்க வேண்டும் என அமெரிக்க விஞ்ஞானி கிர்பி ருன்யன் கருத்துக்கு விஞ்ஞானிகள் குழு ஒன்று அமைத்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.

புளூட்டோவை விட 27 சதவிதம் பெரிதான எரிஸ் கோள் 1992 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பிறகு, பனி மற்றும் பாறைகளால் ஆன புளூட்டோவுக்கு வழங்கப்பட்டிருந்த கோள் என்ற அந்தஸ்து கடந்த 2006 ஆம் ஆண்டு திரும்பப் பெறப்பட்டது. இந்நிலையில் அந்த அந்தஸ்தை மீண்டும் வழங்குமாறு கடந்த வாரம் கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில், அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைகழக விஞ்ஞானிகள் 6 பேர் கொண்ட குழு புளுட்டோவை மீண்டும் கிரகமாக அங்கீகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். கிரகம் என்றால் என்ன என்பதற்கு புதிய விளக்கத்தையும் சர்வதேச விண்வெளி விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.

இது தவிர சந்திரன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட துணைக் கோள்களுக்கும் கோள் என்ற அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். கோள்கள் பட்டியலில் சேர்க்க விதிக்கபட்டிருக்கும் விதிகளை தகர்த்த வேண்டும் என்றும், அவ்வாறு விதிகள் தளர்த்தபட்டால், சூரிய குடும்பத்தில் தற்போதைய 8 கிரகங்களை போல இன்னும் 110 கிரகங்கள் சேர்க்க வேண்டிய நிலை இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.