டெக்

20 கோடி மக்களின் ஆதரவை பெற்ற ஃபேஸ்புக் லைட்..!

20 கோடி மக்களின் ஆதரவை பெற்ற ஃபேஸ்புக் லைட்..!

webteam

குறைந்த இணைய வேகம் உள்ள பகுதிகளில் ஃபேஸ்புக்கை எளிதாக பயன்படுத்த தொடங்கப்பட்ட ஃபேஸ்புக் லைட் தற்போது பல நாடுகளில் வசிக்கும் கோடிக்கணக்கான மக்களின் ஆதரவை பெற்றுள்ளது என அந்நிறுவன அதிகாரி மார்க் சக்கர்பெர்க் கூறியுள்ளார் எல்லோராலும் 4ஜி, 3ஜியைப் பயன்படுத்த முடியாது. எனவே 2ஜியைப் பயன்படுத்துபவர்களுக்காகவே குறைந்த டேட்டாவை எடுத்துக் கொள்ளும் ‘ஃபேஸ்புக் லைட்’ சேவை தொடங்கப்பட்டது. குறைந்த இணைய வேகம் கொண்ட இடங்களில் வசிக்கும் மக்கள் எளிதாக ஃபேஸ்புக்கை பயன்படுத்த ஃபேஸ்புக் லைட் தொடங்கப்பட்டது. ஆனால் இதனை தற்போது உலகம் முழுவதும் உள்ள 20 கோடி மக்கள் பயன்படுத்தி வருவதாக மார்க் சக்கர்பெர்க் கூறியுள்ளார்.

பேஸ்புக் லைட் 50க்கும் மேற்பட்ட மொழிகளில் செயல்படுகிறது. இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற 150க்கும் மேற்பட்ட நாடுகளில் வசிக்கும் மக்களும் இதனை பயன்படுத்தி வருகின்றனர்.