டெக்

சார்ஜ் செய்யாமலேயே 800 கி.மீ. பயணிக்கலாம்... அறிமுகமாகிறது சூரிய சக்தி கார்!

சார்ஜ் செய்யாமலேயே 800 கி.மீ. பயணிக்கலாம்... அறிமுகமாகிறது சூரிய சக்தி கார்!

webteam

சூரிய சக்தி மூலம் தானாக சார்ஜ் செய்துகொள்ளும் வசதி கொண்ட இந்த கார்கள், தொடர்ச்சியாக 500 மைல்கள் (805 கி.மீ.) பயணிக்கும் திறன்பெற்றவை என்று தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது. கார்களின் கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள சோலார் பேனல்கள் மற்றும் பேட்டரிகள் மூலம் இந்த பயணம் சாத்தியம் என்று கூறப்பட்டுள்ளது. வெயில் காலங்களில் தானாகவே சார்ஜ் செய்துகொள்ளும் என்பதால் பல மாதங்கள் நீங்கள் சார்ஜ் செய்யாமலேயே காரில் பயணிக்கலாம். வெயில் குறைவான நேரங்களில் மின்சாரம் மூலம் சார்ஜ் செய்யும் வசதியும் காரில் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. லைட் இயர் ஒன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தவகை கார்கள் 2018ம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்றும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் 2019ம் ஆண்டு முதல் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யப்படும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த கார்களுக்கான புக்கிங் லைட் இயர் நிறுவனத்தின் இணையதளத்தில் ஏற்கனவே தொடங்கிவிட்டது. சூரிய ஒளி சக்தி மற்றும் மின்சாரம் மூலம் இயங்கும் இந்த கார்களின் விலை 1,19,000 யூரோக்கள் (ரூ.87,87,523) என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.