டெக்

குறைந்த விலை ஸ்மார்ட்ஃபோன்: போட்டியில் குதிக்கிறது எல்ஜி

webteam

ஸ்மார்ட்ஃபோன் சந்தையில் மீ்ண்டும் தீவிரமாக களமிறங்கப் போவதாக கொரிய நிறுவனமான எல்ஜி தெரிவித்துள்ளது.

விலை குறைந்த ஸ்மார்ட்ஃபோன்கள் சந்தையில் வரவேற்பைப் பெற்றதையடுத்து எல்ஜியின் தயாரிப்புகள் பின்னுக்குத் தள்ளப்பட்டன. இதையடுத்து, விலை குறைவான ஸ்மார்ட்ஃபோன்களை அறிமுகம் செய்து சந்தையில் கணிசமான இடத்தைப் பிடிக்க, எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் இந்தியா நிறுவனம் தயாராகி வருவதாக அதன் மேலாண் இயக்குனர் கி வான் கிம் தெரிவித்துள்ளார்.