டெக்

டச் கீபேடுடன் அசத்தலாக வெளியாகும் லெனோவா யோகா ஏ 12 டூ இன் ஒன் டிவைஸ்

டச் கீபேடுடன் அசத்தலாக வெளியாகும் லெனோவா யோகா ஏ 12 டூ இன் ஒன் டிவைஸ்

webteam

ஹார்ட்வேர் கீபோர்டுகளை ஓரங்கட்டியுள்ள லெனோவா, தனது லேட்டஸ் யோகா ஏ12 டூ இன் ஒன் டைவைஸையும் டச் கீ போர்டுடன் அறிமுகப்படுத்தியுள்ளது.

விண்டோஸ் 10 இயங்குதளத்துடன் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட யோகா புக் லேப்டாப்பின் நீட்சியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள யோகா ஏ12வை லேப்டாப்பாகவும், டேப்லெட்டாகவும் பயன்படுத்தலாம். 299.99 அமெரிக்க டாலர்கள் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 20 ஆயிரம்) என்ற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட உள்ள யோகா ஏ12 ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், 12.2 இன்ச் திரை அளவு, 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி நினைவுத் திறனுடன் யோகா ஏ12 அறிமுகமாகிறது. இவை பிப்ரவரி 8ம் தேதி முதல் லெனோவா இணையதளத்தில் விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.