டெக்

இனி ஸ்மார்ட் போனை கழுவி பயன்படுத்தலாம்..!

webteam

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த யோசெரா என்ற நிறுவனம் சோப்பு போட்டு கழுவி பயன்படுத்தும் புதிய வகை ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது.

ரஃப்ரீ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய மாடல் ஸ்மார்ட் போனை சோப்பு போட்டு கழுவி சுத்தப்படுத்தலாம். இதற்காக எந்த பிரேத்யேக சோப்பும் பயன்படுத்த தேவை இல்லை. சூடான தண்ணீரில் கூட ஸ்மார்ட் போனை சுத்தபடுத்தலாம். இந்த மொபைல் நௌவ்கட் இயங்கு தளத்தில் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதுமையான ஸ்மார்ட் போன் 5 இன்ச் திரை, 2 ஜிபி ரேம், 3000 மி. ஆம்பியர் பேட்டரி, 13 மெகாபிக்சல் பின்புற எதிர்கொள்ளும் கேமரா கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த போனின் தொடுதிரையை ஈரமான கையுடன் கூட இயக்கலாம். மேலும் நீச்சல் குளத்திலும், மழையிலும் கூட இந்த மொபைலை பயன்படுத்த முடியும். பிங்க், வெள்ளை, ப்ளூ ஆகிய வண்ணங்களில் வெளிவந்துள்ளது.