டெக்

ரஷ்ய - இந்திய உறவின் அடையாளம் கூடங்குளம் அணுமின் நிலையம்

webteam

‘இந்திய-ரஷிய உறவுக்கு அடையாளம் கூடங்குளம் அணுமின் நிலையம்’ என்று ரஷ்ய அறிவியல் பண்பாட்டு மைய இயக்குனர் மிக்கையில் கோர்படோவ் தெரிவித்தார்.

ரஷ்ய அணு ஆற்றல் கழகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்துடன் இணைந்து கிண்டி காந்தி மண்டபம் சாலையில் உள்ள பிர்லா கோளரங்கத்தில்
அறிவியல் திருவிழா நடத்துகிறது. இதன் தொடக்கவிழா காலை பிர்லா கோளரங்க வளாகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் நிர்வாக இயக்குனர் பி.அய்யம்பெருமாள் தலைமை தாங்கினார். இதில் ரஷ்ய அறிவியல் பண்பாட்டு மையத்தின் இயக்குனர் மிக்கையில் கோர்படோவ், மும்பை அணு ஆற்றல் துறையின் விஞ்ஞானி எஸ்.கே.மல்கோத்ரா ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் அணு ஆற்றல் பற்றி தொடக்க அறிவினை உள்ளடக்கிய ‘அணுக்கரு அரிச்சுவடி’ என்ற தமிழ்நூல் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து பேசிய ரஷ்ய அறிவியல் பண்பாட்டு மையத்தின் இயக்குனர் மிக்கையில், 

சோவியத் யூனியன் இருந்த காலத்திலே இந்தியாவுடன் நல்ல உறவு இருந்தது. சோவியத் யூனியன் இந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கு உதவியது. குறிப்பாக மக்களை
பாதுகாக்க ராணுவத்துக்கு தேவையான நவீன தொழில் நுட்பங்களை வழங்கியது. அதன்பின்னர், ரஷ்யாவாக மாறிய பிறகும் இந்தியாவுடனான நட்பு உறவு தொடருகிறது. இந்த உறவுக்கு அணு மின்நிலையம் ஒரு அடையாளமாக உள்ளது. அதிலும் குறிப்பாக கூடங்குளம் அணு மின்நிலையம் இருநாட்டின் உறவுக்கான பாலமாக அமைகிறது" என்றார்.