டெக்

மொபைல் தயாரிப்பில் களமிறங்கும் KFC

webteam

ஃபிரைடு சிக்கனுக்கு பெயர் போன KFC தற்போது மொபைல் தயாரிப்பில் களமிறங்கியுள்ளது. 

1987 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட KFC இன்று வரை இளைஞர்கள் மத்தியில் பிரபலமான கடையாக உலா வருகிறது. 30 வருடத்தை பூர்த்தி செய்யும் KFC இதனை கொண்டாடும் விதமாக ஹவாய் நிறுவனத்துடன் இணைந்து ஸ்மார்ட்போன் ஒன்றை வடிவமைத்துள்ளது. சீனாவில் இந்த மொபைல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் கேமிராக்களின் திறன் தொடர்பான தகவல்கள் வெளியிடப்படவில்லை.

இதன் சிறப்பம்சங்கள்

5.5 அங்குல திரை
1280 x 720 பிக்சல் ரெசொல்யூஷன் 
குவால்கோம் ஸ்னாப்டிராகன் 425 செயலி
3ஜிபி ரேம் 
32ஜிபி உள்ளடக்க சேமிப்பு வசதி
கைரேகை ஸ்கேனர் வசதி 
3,020மி. ஆம்பியர் பேட்டரி திறன்  
சிவப்பு நிறத்தினைக் கொண்ட இவ்வாறான 5,000 கைப்பேசிகள் சீனாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ. 10,400 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.