கவாஸாகி பைக் நிறுவனம் இந்தியாவில் புதிய நிஞ்ஜா 1100SX பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது, இதன் Ex-Showroom ஆரம்ப விலை ரூ. 13.49 லட்சம் என கூறப்பட்டுள்ளது. ரூ.50,000 டோக்கன் தொகையுடன் முன்பதிவு செய்துக்கொள்ளலாம் மற்றும் டெலிவரி ஜனவரி 2025 முதல் தொடங்கும் என அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
புதியதாக களம்கண்டுள்ள Ninja 1100SX ஆனது Ninja 1000SX பைக்குக்கு மாற்றாக அறிமுகமாகியுள்ளது. இந்த Ninja 1100SX பைக் ஆனது பழைய 1,043cc பதிலாக 1,099cc மூலம் இயக்கப்படுகிறது. இது 9,000rpm இல் 136PS மற்றும் 7,600rpm இல் 113Nm ஐ வழங்குகிறது. மேலும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
அம்சங்களைப் பொறுத்தவரை,
Ninja 1100SX பைக்கில் ரைடாலஜி பயன்பாட்டின் மூலம் ஸ்மார்ட்போன் இணைப்புடன் 4.3-இன்ச் TFT இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோலைக் கொண்டுள்ளது.
எலக்ட்ரானிக் க்ரூஸ் கன்ட்ரோல், பவர் மோடுகள், கார்னரிங் மேனேஜ்மென்ட், டிராக்ஷன் கண்ட்ரோல், ஏபிஎஸ் மற்றும் யூஎஸ்பி-சி போர்ட் போன்ற அம்சங்களும் உள்ளன.
Ninja 1100SX ஆனது புதுப்பிக்கப்பட்ட இரு-திசை விரைவு ஷிஃப்டரைப் பெறுகிறது, இது நிஞ்ஜா 1000SX இல் உள்ளதை விட மென்மையாக இருக்கும். இந்த மாற்றங்கள் குறைந்த செயல்திறன் மற்றும் சிறந்த மைலேஜையும் வழங்கும் என்று கவாஸாகி நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலக சந்தையில் டாப்-ஸ்பெக் SE வேரியன்ட்டை விற்பனை செய்தாலும், தற்போது ஸ்டாண்டர்டு வேரியண்ட்டை மட்டுமே இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்ற பைக்காகவும், சிறப்பம்சங்களை அதிகம் தாங்கிய பைக்காகவும் இதனை கவாஸாகி தயார் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.