டெக்

ஜியோ போன் நெக்ஸ்டின் விலை விவரம் வெளியானது! இ.எம்.ஐ வசதியும் உண்டு!

EllusamyKarthik

ஜியோ மற்றும் கூகுள் இணைந்து ஜியோ போன் நெக்ஸ்ட் என்ற போனை அறிமுகம் செய்துள்ளது. பட்ஜெட் விலையில் வெளியாகி உள்ள இந்த போன் மாத தவணையில் கிடைக்கும் என ஜியோ தெரிவித்துள்ளது. வரும் தீபாவளி முதல் இந்த போன் விற்பனைக்கு வருகிறது. 

அதன்படி 1999 ரூபாய் முன் பணமாக செலுத்தி இந்த போனை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாத தவனையாக 300 ரூபாய் செலுத்த வேண்டும். 501 ரூபாய் புராசசிங் கட்டணமும் வசூலிக்க படுகிறது. ஜியோ வலைத்தளம் மற்றும் ஜியோ ரீடெயில் மார்ட்டில் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே இந்த போன் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவணை வசதி வேண்டாதவர்கள் 6,499 ரூபாய் செலுத்தி போனை பெற்றுக் கொள்ளலாம். ஜியோ போன் நெக்ஸ்டின் விலை இது தான். இந்த போன் பிரகதி இயங்கு தளத்தில் இயங்குகிறது. 13 மெகாபிக்சல் பின்புற கேமரா, குவால்காம் ஸ்னாப்டிராகன் 215 SoC இந்த போனில் உள்ளது.