டெக்

நாளை முதல் விற்பனைக்கு வரும் ஜியோ போன் நெக்ஸ்டின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

EllusamyKarthik

ஜியோ நிறுவனம் தனது முதல் ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளாது. கூகுள் நிறுவனத்துடன் இணைந்து இந்த போனை ஜியோ உருவாக்கியுள்ளது. 6,499 ரூபாய் விலையில் இந்த போன் நவம்பர் 4 முதல் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. இந்த போனை சுலப மாத தவணையிலும் பெற்றுக் கொள்ளும் வசதிகளை ஜியோ வழங்கியுள்ளது. 

2ஜி மாடல் போன்களை பயன்படுத்தி வரும் பயனர்களை கருத்தில் கொண்டு இந்த போனை ஜியோ சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் ஃபீச்சர் போன் மற்றும் ஸ்மார்ட் போன் பயனர்களுக்கு இடையே உள்ள டிஜிட்டல் வேறுபாட்டை களைய முனைகிறது ஜியோ. என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போனாக இந்த ஜியோ போன் நெக்ஸ்ட் களம் கண்டுள்ளது. 

பிரகதி இயங்குதளத்தில் இயங்கும் இந்த போனின் ஃபர்ஸ்ட் லுக் இங்கே அணி வகுக்கிறது. 

இந்த போனில் ரிமூவபிள் பேட்டரி இடம் பெற்றுள்ளது. ஜியோ மார்ட் டிஜிட்டல் ரீடைலர், JIO.COM/next வலைதளம் மற்றும் 70182 70182 என்ற எண்ணுக்கு ‘Hi’ என வாட்ஸ்-அப் செய்தும் இந்த போனை பெறலாம்.