டெக்

‘ஜியோ புக்’ என்ற மலிவு விலை மடிக்கணினியை அறிமுகம் செய்யும் ஜியோ

EllusamyKarthik

இந்தியாவில் தொலைத்தொடர்பு சேவையில் கொடிகட்டி பறந்து வருகிறது ஜியோ நிறுவனம். இந்நிலையில் ‘ஜியோ புக்’ என்ற மலிவு விலை மடிக்கணினியை ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டின் இறுதியில் இந்த லேப்டாப் சந்தையில் அறிமுகமாகும் என சொல்லப்படுகிறது. 

வழக்கமான விண்டோஸ் ஆப்பிரேட்டிங் சிஸ்டெம் இல்லாமல் ஜியோ ஆப்பிரேட்டிங் சிஸ்டமில் இந்த லேப்டாப் இயங்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. குரோம் புக் போல இந்த ஜியோ புக் இயங்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. 

மிட் சைஸ் லேப்டாப் மாடலாக இது வெளியாகவும் வாய்ப்புள்ளதாம். 4GB LPDDR4x RAM மற்றும் 64GB eMMC மாதிரியானவை இதில் இடம்பெற்றிருக்க வாய்ப்புகள் உள்ளதாம். இது மாதிரி வடிவம் குறித்த உறுதியான தகவலை ஜியோ நிறுவனம் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. கொரோனா பொதுமுடக்கம் லேப்டாப் மாதிரியான போர்ட்டபுள் கணினிக்கு தேவை இருப்பதால் ஜியோ இதில் முதலீடு விரும்புதாகவும் தெரிகிறது