டெக்

ஜியோ, ஏர்டெல், வோடாஃபோன் இடையே ஆஃபர் போட்டி: எது சிறந்த ஆஃபர்?

webteam

ஜியோவைப் போன்றே ஏர்டெல், வோடாஃபோன் நிறுவனங்களும் ரூ.149 மற்றும் ரூ.199 ஆஃபர்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடாஃபோன் உள்ளிட்ட சிம் நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்ள பல்வேறு ஆஃபர்களை ஜியோவிற்கு இணையாக வழங்கத் தொடங்கியுள்ளன. இந்நிலையில் ஜியோவைப் போன்றே ரூ.149 மற்றும் ரூ.199ல் ஏர்டெல் மற்றும் வோடாஃபோன் நிறுவனங்களும் ஆஃபர்களை அறிவித்துள்ளன.

ஏர்டெலில் ரூ.199க்கு, அன்லிமிடெட் லோகல் அழைப்புகள் மற்றும் எஸ்டீடி அழைப்புகளுடன், 1 ஜிபி டேடாவும் 28 நாட்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்கள் மை ஏர்டெல் ஆப்-ல் சிறந்த ஆஃபர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இந்த ஆஃபரில் இதுதவிர அன்லிமிடெட் இலவச இன்கமிங் ரோமிங் அழைப்புகளும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அவுட்கோயிங் ரோமிங் அழைப்புகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும். இதனுடன் அன்லிமிடெட் லோகல் மற்றும் நேஷனல் எஸ்எம்எஸ்-களும் வழங்கப்பட்டுள்ளன.

வோடாஃபோனில் ரூ.199க்கு, அன்லிமிடெட் லோகல் மற்றும் எஸ்டீடி அழைப்புகளுடன், 1 ஜிபி 4ஜி அல்லது 3ஜி டேட்டாவும் 28 நாட்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அன்லிமிடெட் அழைப்புகளுக்கு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஒரு நாளைக்கு 250 நிமிடங்கள் மட்டுமே அழைப்புகளை மேற்கொள்ள முடியும், லோகல் மற்றும் எஸ்டீடி அழைப்புகளுக்கு மொத்தமாக வாரத்திற்கு 1000 நிமிடங்கள் பேசலாம். ஒரு நாளைக்கு 250 நிமிடங்களுக்கு பேசும் பட்சத்தில் நிமிடத்திற்கு 30 பைசா வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏர்டெலில் ரூ.149க்கு, 300 ஜிபி டேட்டாவுடன், அன்லிமிடெட் லோகல் மற்றும் எஸ்டீடி அழைப்புகள் 28 நாட்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஆஃபரில் 4ஜி ஹேண்ட்செட் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே 300 ஜிபி டேட்டாவை பெற முடியும் என்றும், மற்ற ஹேண்ட்செட் வாடிக்கையாளர்கள் 50 ஜிபி டேடா மட்டுமே பெற இயலும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோவில் ரூ.149க்கு, தீபாவளியின் போது வெளியிட்ட ஆஃபர் தற்போது மேலும் சில சலுகைகள் இணைத்து வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ரூ.149க்கு, 4.2 ஜிபி 4ஜி டேட்டாவுடன், அன்லிமிடெட் லோகல் மற்றும் எஸ்டீடி அழைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் இந்த ஆஃபரில் தினசரி 0.15 ஜிபி வரை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.