டெக்

பூமியின் மையப்பகுதியில் என்ன இருக்கிறது? புதிரை விடுவிக்க விஞ்ஞானிகள் ஆய்வு

webteam

பூமியின் மையப்பகுதியில் என்ன இருக்கிறது என்பதைப் பற்றி விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அதை வைத்து 4500 ஆண்டுகளுக்கு முன் பூமி எப்படி இருந்திருக்கும் எனத் தெரிந்து கொள்ளலாம் என அவர்கள் கூறுகின்றனர்.

பூமியின் உள்மையப்பகுதியில் நிலவும் உயர் தட்பவெப்ப நிலையையும், அழுத்தங்களையும் கொண்டு நடத்திய ஆய்வில் பூமியின் உள்மையப்பகுதியின் எடையில் சுமார் 5 சதவீதம் அளவு சிலிக்கான் இருப்பது டோக்கியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

உலகம் எவ்வாறு உருவானது என்பது பற்றி புரிந்துகொள்ள இந்த கண்டுபிடிப்பு உதவும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பூமியின் உள்மையப்பகுதி மிகவும் ஆழத்தில் சிலிக்கான் இருப்பதால், நேரடியாக இதனை ஆய்வு செய்ய முடியாது.

எனவே இந்தப் பகுதிக்குள் அதிர்வலைகளை உட்புகச் செய்து அதன் மூலம் அப்பகுதி எதனால் ஆனது என்பதைப் புரிந்து கொள்ள விஞ்ஞானிகள் திட்டமிட்டனர்.

இதன்படி, நடத்திய ஆய்வில் பூமியின் உள்மையப்பகுதியில் 85 சதவீதம் இரும்பும், சுமார் 10 சதவீதம் நிக்கலும் நிரப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது.

எஞ்சிய 5 சதவீதம் சிலிக்கானாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

சிலிக்கான் இருப்பதை உறுதி செய்ய இன்னும் அதிக ஆய்வுகள் நடத்த வேண்டியுள்ளது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆய்வின் மூலம் 4500 கோடி ஆண்டுகளுக்கு முன்னால், பூமி உருவான போது, பூமியின் மையம் எப்படி இருந்தது. இப்போது எப்படி மாற்றம் அடைந்துள்ளது என்பது தெரியவரும் எனவும் இதற்கு முன் நிகழ்த்திய ஆய்வில் பூமியின் உள்மையப்பகுதியில் ஆக்ஸிஜன் இருப்பது கண்டறியப்பட்டது எனவும் கேம்பிரிட்ஃஜ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சீமோன் ரெட்ஃபெர்ன் தெரிவித்திருக்கிறார்.

ஆனால் ஜப்பானிய விஞ்ஞானியான போரசிரியர் ஈஜி ஒக்டானியின் கருத்துப்படி, 4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே அதிக அளவிலான சிலிக்கான் பூமியின் உள்மையப்பகுதியில் இருந்திருக்கும். பூமியின் மையப்பகுதி அல்லாத பிற பகுதிகளில் அதிகமான ஆக்ஸிஜன் இருந்திருக்கலாம் என தெரிவித்துள்ளார்.