கார்டோசாட் 2இ செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி சி-38 ராக்கெட் நாளை காலை விண்ணில் ஏவப்படுகிறது. அதற்கான 28 மணி நேர கவுண்ட்டவுன் இன்று காலை தொடங்கியது. இதற்காக ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
712 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள், கடல்சார் ஆராய்ச்சி, தகவல் தொடர்பு, வானிலை பயன்பாடு உள்ளிட்டவற்றை கண்காணிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் இயற்கை வளங்களை துல்லியமாக படம்பிடிக்கும் விதமாக 3 கேமரா பொருத்தப்பட்டுள்ளன. 505 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்படும் இந்த செயற்கைக்கோள் 5 ஆண்டுகள் செயல்படும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.