isro nvs 02 web
டெக்

இஸ்ரோ அனுப்பிய NVS 02 செயற்கைக் கோள் |சுற்றுப்பாதையில் ஏற்பட்ட சிக்கல்!

கடந்த வாரம் இஸ்ரோ அனுப்பிய செயற்கைக்கோளின் உந்துவிசை மோட்டாரில் வால்வு பிரச்சினை ஏற்பட்டுள்ளதால் அதை திட்டமிட்ட பாதையில் நிலை நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

PT WEB

இஸ்ரோ கடந்த மாதம் 29ஆம் தேதி தனது நூறாவது ராக்கெட் மூலமாக NVS 02 செயற்கைக்கோளை விண்ணிற்கு அனுப்பியது. இந்நிலையில் அதில் உயரத்தை அதிகரிப்பதற்கான மோட்டார் வால்வு செயலிழந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதன் காரணமாக NVS 02 செயற்கைக்கோள் புவி பரிமாற்ற சுற்றுவட்ட பாதையில் சிக்கி இருப்பதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

ஏற்பட்ட சிக்கல்..

36,000 கிலோமீட்டரில் இந்திய நிலப்பரப்பை நோக்கியவாறு செயற்கைக்கோள் சுற்றினால்தான் துல்லிய நேர விகிதத்தில் இடத்தரவு சேவைகளை வழங்க முடியும்.

isro nvs 02

ஏற்கனவே இந்தியாவின் நேவிகேஷன் செயற்கைக்கோள் அமைப்பான NaVICல் நான்கு செயற்கைக்கோள்கள் வலை அமைப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஐந்தாவதாக NVS 02 செயற்கைக்கோள் நேவிகேஷன் வலை அமைப்பில் இணையுமா என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து முதுநிலை விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் நம்மோடு பகிர்ந்துகொண்டவற்றை, கீழ் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்..