இஸ்ரேலிய தொழில்நுட்ப நிறுவனம், பயணிகள் நீண்ட தூரம் பயணம் செய்யக்கூடிய வகையில் ஓட்டுனரில்லா தானியங்கி ஹெலிகாப்டர் (ட்ரோன்)- ஐ அறிமுகபடுத்த உள்ளது.
புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஓட்டுனர் இல்லா தானியங்கி விமானத்தில் சரக்குப் பொருட்கள் அல்லது பயணிகள் பயணிக்கலாம்.
1,500 கிலோ (1.5 டன்) எடைய உடைய இந்த விமானம் 500 கிலோ எடை கொண்டயைஏற்றிச் செல்லும் திறனுடையது. ஒரு மணி நேரத்திற்கு 185 கி.மீ. (115 மைல்) பயணம் செய்யும் திறன் உடையது.
ட்ரோன் விமானத்தை குறிப்பாக இராணுவத்திற்கு பயன்படுத்தலாம். ரிமோட் கண்ட்ரோல் மூலம் இந்த ட்ரோன் விமானம் இயக்கப்படுகிறது. விமானத்தில் கேமிரா பொருத்தப்பட்டுள்ளதால் பாதுகாப்பாக பயணம் செய்ய முடியும். இதன் விலை 95 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டு முதல் இந்த விமானம் நடைமுறைக்கு வரும் என விமானத்தை வடிவமைத்துள்ள இஸ்ரேலிய நிறுவனம் தெரிவித்துள்ளது.