டெக்

நிலவில் மோதியது இஸ்ரேல் விண்கலம்!

நிலவில் மோதியது இஸ்ரேல் விண்கலம்!

webteam

நிலவை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட இஸ்ரேல் விண்கலம் நிலவின் பரப்பில் மோதி சேதமடைந்தது.

நிலவில் பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக, இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட 'பரேஷீட்' (Beresheet) எனும் விண்கலம் ஏழு வாரத்துக்கு முன் அனுப்பப்பட்டது. இதன் மூலம், நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய விண்கலங்களை அனுப்பிய ரஷ்யா, அமெரிக்கா, சீனா நாடுகளுடன் இஸ்ரேலும் இணைய திட்டமிட்டிருந்தது.

ஆனால், நிலவை தொடுவதற்கு முன்பாகவே, அதன் பரப்பில் தொழிநுட்பக் கோளாறு காரணமாக, பரேஷீட் விண்கலம் விபத்துக்குள்ளானது. கடந்த வாரம் இந்த விபத்து நடந்துள்ளது. இதையடுத்து இஸ்ரேலின் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.