டெக்

நாளை முதல் ‘iOS 15’-ஐ அப்டேட் செய்து கொள்ள ஆப்பிள் நிறுவனம் அறிவுறுத்தல்

EllusamyKarthik

ஆப்பிள் நிறுவன போன்களின் இயங்கு தளத்தில் புதிய வெர்ஷனான iOS 15 நாளை அறிமுகமாகிறது. இதற்கு முந்தைய வெர்ஷனை பயன்படுத்தி வரும் பயனர்கள் அப்டேட் செய்து கொள்ளுமாறு அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் மாத தொடக்கத்தில் இந்த இயங்கு தளம் பீட்டா வெர்ஷனாக அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

ஐபோன் 13 மினி, ஐபோன் 13 ப்ரோ, ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ், ஐபோன் 12, ஐபோன் 12 மினி, ஐபோன் 12 ப்ரோ, ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ், ஐபோன் 11, ஐபோன் 11 ப்ரோ, ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ், ஐபோன் XS, ஐபோன் XS மேக்ஸ், ஐபோன் XR, iPhone X, ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ், ஐபோன் 7, ஐபோன் 7 பிளஸ், ஐபோன் 6 எஸ், ஐபோன் 6s பிளஸ், iPhone SE மாதிரியான ஐபோன்களில் இந்த புதிய இயங்குதளத்தை அப்டேட் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புதிய ஃபேஸ்டைம் அம்சம், iமெசேஜ் இம்ப்ரூவ்மென்ட், நோட்ஸ்களில் டேக் செய்யும் ஆப்ஷன், ஃபோகஸ் டூல், நூறு புதிய எமோஜி, காணாமல் போன போன்களில் தரவுகள் அழிக்கப்பட்டிருந்தாலும் அதன் லொக்கேஷனை டிராக் செய்யும் வசதி மாதிரியானவை இந்த புதிய இயங்குதளத்தில் இடம் பெற்றுள்ளது.