டெக்

iPhone, iPad என ஆப்பிளின் தயாரிப்புகள் ஏன் i என்ற எழுத்தில் வருகிறது தெரியுமா?

JananiGovindhan

உலகம் முழுவதும் இருக்கும் பெரும்பாலான மக்களால் வேண்டி விரும்பி வாங்கப்படும் கேட்ஜெட்களில் ஒன்றாக இருக்கிறது ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகள். விலை அதிகமாக இருந்தாலும் செக்யூரிட்டி அம்சங்களுக்காகவே ஆப்பிள் தயாரிப்புகளை வாங்குவதற்காக வரிசைக்கட்டி நிற்கவும் தயங்குவதில்லை.

அதேவேளையில் ஆப்பிள் நிறுவன தயாரிப்புக்கான ஹேட்டர்ஸ்களும் இருப்பது இயற்கையான ஒன்றுதான். இருப்பினும், ஆண்டுதோறும் ஆப்பிள் தனது புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்யும் போதெல்லாம் என்ன என்ன அம்சங்களெல்லாம் இருக்கும் என்று ஆவலோடு எதிர்நோக்கும் கூட்டமும் அதிகமே.

இப்படி இருக்கையில் ஆப்பிள் தயாரிப்புகள் குறித்த பல சுவாரஸ்யமான தகவல்கள் தொடர்ந்து சமூக வலைதளங்கள் வாயிலாகவோ அந்நிறுவனத்தின் அதிகாரிகள், நிர்வாகிகள் மூலமாகவோ தெரியவரும். அந்த வகையில் ஆப்பிள் நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளும் ஐ என்ற முன்னொட்டை வைத்து அதாவது iPhone, iMac, iPad, iPod என்றே இருப்பதன் சிறப்பம்சம் என்ன? அதன் பின்னணி? என்ன என்பதற்கான சுவாரஸ்யமான விளக்கமும் இருக்கிறதாம்.

அதாவது, ஆப்பிள் நிறுவனத்தின் ஐமேக் உருவாக்கியபோது உலகில் இன்டெர்நெட் வசதி அறிமுகமாக சமயம். அப்போது கம்ப்யூட்டர் பயன்பாட்டுக்கு விற்பனை புள்ளியாக இணைய சேவையே இருந்தது. அந்த சமயத்தில் இணைய சேவையின் கனெக்ட்டிவிட்டியை வேகமாகவும், எளிதாக்குவதற்காகவே ஆப்பிளின் ஐமேக் உருவாக்கப்பட்டதாகவும் iMac-ல் உள்ள i என்ற எழுத்து INTERNET-ஐ குறிப்பிடுவதாகவும் கூறப்பட்டது.

அதே நேரத்தில் imac-ல் உள்ள internet மட்டுமல்லாமல் Individual, Instruct, Inform & Inspire ஆகியவற்றையும் குறிக்கிறது என ஆப்பிளின் CEO ஸ்டீவ் ஜாப்ஸ் கூறியிருப்பார். இதனையடுத்து i என்ற முன்னொட்டு கொண்ட iMac மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்த காரணத்தால் ஆப்பிளின் பிற தயாரிப்புகளான iPhone, iPod, iPad மற்றும் ஆப்பிளின் சாஃப்ட்வேருக்கும் iMovie என்று பெயரிடப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.