இந்தியாவில் ஸ்மார்ட்ஃபோன் பயனர்கள் ஒவ்வொரு நாளும் 4 மணி நேரத்திற்கும் மேலாக ஏதாவது ஒரு செயலியில் மூழ்கி இருப்பது ஆய்வில் வெளியாகியுள்ளது.
இன்றைய இளசுகள் சாப்பாடு, தூக்கம் இல்லாமல் கூட இருந்துவிடுவார்கள், ஆனால் செல்ஃபோன் இல்லாமல் ஒருமணி நேரம் கூட இருக்க முடியாது. உலக அளவில் ஆண்ட்ராய்டு ஃபோன் பயன்படுத்தும் 10 மிகப்பெரிய நாடுகளில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது. ஆப் ஆனி என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில், கடந்த மே மாதம் இந்தியாவில் ஸ்மார்ட்ஃபோன் பயனர்கள் ஒவ்வொரு நாளும் 4 மணி நேரத்திற்கும் மேலாக ஏதாவது ஒரு செயலியை பயன்படுத்துவதில் நேரத்தைச் செலவிடுவதாக தெரியவந்துள்ளது.
ஷாப்பிங் ஆப்ஸ், டிராவல் ஆப்ஸ், கேம்ஸ் ஆப்ஸ் ஆகியவற்றையே இந்தியர்கள் அதிகமாகப் பயன்படுத்துவது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. ஃபோனை குறைந்த அளவில் பயன்படுத்துபவர்கள்கூட ஒருநாளைக்கு குறைந்தது 1.5 மணி நேரம் ஏதாவது ஒரு அப்ளிகேஷனை பயன்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
முன்னதாக ஆண்ட்ராய்டு ஃபோன் பயன்படுத்தும் முதல் ஐந்து இடங்களில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.