இந்தியாவின் 100ஆவது செயற்கைக்கோளான கார்டோசாட் 2 ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி தளத்தில் இருந்து இன்று செலுத்தப்படுகிறது.
இதற்கான கவுன்டவுண் நேற்று காலை 5.30 மணிக்கு தொடங்கியது. இந்தியாவில் இருந்து ஒரு சிறியவகை செயற்கைக்கோள், ஒரு நானோ செயற்கைக்கோள் ஆகியவையும் ஏவப்படவுள்ளன. கார்டோசாட் 2 உட்பட 31 செயற்கைக்கோள்கள் பிஎஸ்எல்வி சி40 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படவுள்ளன. 320 டன் எடை கொண்ட பிஎஸ்எல்வி சி40 ராக்கெட், பூமியில் இருந்து புறப்பட்ட 2 மணி நேரம் 22 வினாடிகளில் 31 செயற்கைக்கோள்களையும் விண்ணில் நிலை நிறுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார்டோசாட் 2 வரிசை செயற்கைக்கோள் பூமியை படம் எடுத்து அனுப்புதல், கடல்போக்கு வரத்தை ஒழுங்குபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.