டெக்

2100-ல் இந்தியாவில் உயிர்வாழ்வது கஷ்டம்: ஷாக் கொடுக்கிறது ஆய்வு

2100-ல் இந்தியாவில் உயிர்வாழ்வது கஷ்டம்: ஷாக் கொடுக்கிறது ஆய்வு

webteam

பருவநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமயமாதல் போன்ற காரணங்களால் 2100-ம் ஆண்டில் இந்தியாவில் உயிர் வாழ்வது கஷ்டம் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் உள்ளிட்ட தெற்காசிய நாடுகள் சமீபத்திய ஆண்டுகளில் கடும் வெப்ப அலைகளால் பாதிக்கப்பட்டு வருகின்றன. 2015-ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் நாடுகளில் ஏற்பட்ட பயங்கர வெப்ப அலைகளுக்கு 3,500-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதே நிலை தொடர்ந்தால் 2100-ம் ஆண்டில் இந்தியாவில் உயிர்வாழ்வது கடினம் என ஆய்வில் தெரியவந்துள்ளது. 

பூமியில் நிலவும் வெப்ப நிலையை ஈரப்பதம் சேர்ந்தது மற்றும் சேராதது என விஞ்ஞானிகள் பிரிக்கின்றனர். இதில் காற்றில் இருக்கும் ஈரப்பதத்தை ஆவியாக்கிய பிறகு கிடைக்கும் குறைந்தபட்ச வெப்பநிலை, ஈரப்பதம் சேர்ந்த வெப்பநிலையாக அறியப்படுகிறது. இந்த வெப்பநிலை 2100-ம் ஆண்டுவாக்கில் இந்தியாவில் 35 டிகிரி செல்சியசாக அதிகரிக்கும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அப்போது அதிக வெப்பம் மற்றும் காற்றின் ஈரப்பதத்தால் மனித உடல் தகுதி இழந்து நோய்களும், மரணமும் அதிகரிக்கும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.