டெக்

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜி சாட் 9

Rasus

ஜிஎஸ்எல்வி எப் 9 ராக்கெட் மூலம் ஜி சாட் 9 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

இரண்டாயிரத்து இருநூற்று முப்பது கிலோ எடையுள்ள ஜிசாட் 9 செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து இன்று மாலை‌ விண்ணில் செலுத்தப்பட்டது. சார்க் கூட்டமைப்பில் உள்ள நேபாள், பூடான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், இலங்கை, மாலத்தீவு ஆகிய நாடுகளின் தகவல் தொடர்புக்கு பயன்படுத்தப்பட உள்ள இந்த ஜிசாட் 9 செயற்கைக்கோளின் ஆயுட்காலம் 12 ஆண்டுகள்.

இந்த செயற்கைக்கோளை தயாரிக்க 235 கோடி ரூபாய் செலவானது என்றும் சார்க் நாடுகளின் நட்புறவை மேம்படுத்த அதற்கான செலவை இந்தியாவே ஏற்றுக் கொண்டுள்ளது எனவும் இஸ்ரோ கூறியுள்ளது. இதில் பாகிஸ்தான் சேரவில்லை என்றும் டிடிஹெச் மூலம் டிவி சேனல்களை தெளிவாக ஒளிபரப்பும் வசதி, தொலை மருத்துவம் ஆகியவற்றிற்காக இந்த செயற்கைக்கோள் பயன்படுத்தப்படும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

ஜி சாட் 9 செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டதற்கு பிரதமர் மோடி விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இந்த வரலாற்று நிகழ்வு புதிய எல்லையை தொட வழிகளை ஏற்படுத்தி உள்ளதாக பிரதமர் கூறியுள்ளார்.